முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியப் பிரதேசத்தில் இந்திய போர் பயிற்சி விமானம் விபத்து

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      இந்தியா
Madhya-Pradesh-2025-02-06

போபால், மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது.

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள பஹ்ரேதா சனி கிராமம் அருகே இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைவாக அனுப்பப்பட்டுள்ளனர். விமான விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை என்றாலும், சம்பவ இடத்திலிருந்து வந்த காணொளிகளில், ஒரு வயலில் சிதறிக் கிடந்த விமான பாகங்கள் தீயில் எறிவதையும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த விமானத்தைச் சுற்றி கூடியிருந்ததையும் காட்டியது.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்பட்டவுடன் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து