முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி.க்கு எதிராக அதிக விக்கெட்டுகள்: ஜடேஜா புதிய சாதனை

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      விளையாட்டு
Jadeja 2024-03-17

Source: provided

நாக்பூர்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில்   கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து, இந்திய வீரர் ஜடேஜா  இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இதுவரை 42 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

முதல் ஒருநாள் போட்டி...

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.  

ஜடேஜா 42 விக்கெட்டுகள்...

இந்திய ஆல் ரவுண்டரான ஜடேஜா, இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இதுவரை 42 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 40 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து