முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் வரும் 12-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது சென்னை ஐகோர்ட்

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை வருகிற 12-ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது 

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகள் விசாரணை முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கக் கூடாது என்று சூரியமூர்த்தி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இவரது கோரிக்கையை அனைத்து தரப்பினரின் கருத்தை கேட்டு விசாரித்து தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அதேபால, அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், புகழேந்தி, எம்.ஜி.ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி இருந்தனர்.

இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்தது. இந்த வழக்கிற்கு தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது  எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வக்கீல், ''மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டால், சட்டத்துக்கு உட்பட்டுதான் தேர்தல் ஆணையம் விசாரிக்க முடியும். மாறாக கோர்ட்டு போல, பலருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க முடியாது.  எனவே எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்'' என்று வாதிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட்டு உத்தரவின்படி நோட்டீஸ் அனுப்பியதாக கூறிய தேர்தல் ஆணையம் தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.  மேலும் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து