முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்தியவர்: டெல்லி முதல்வராகிறார் பர்வேஷ்

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2025      இந்தியா
Kejriwal 2023 04 14

Source: provided

புதுடில்லி: புதுடில்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க.  வேட்பாளர் பர்வேஷ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

டெல்லி சட்டமன்றத்துக்கு கடந்த 5-ம் தேதி நடந்த தேர்தலில்       பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 70 இடங்களில்  48 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சி  22 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.  

புது டில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டில்லி முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால், பா.ஜ.க.  வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்துள்ள நிலையில், பர்வேஷ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

முதல்வர் பதவிக்கான போட்டியில் கைலாஷ் கெலாட், கபிஸ் மிஸ்ரா உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.  ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டில்லி முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்துள்ள நிலையில், ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பா.ஜ.க.  வேட்பாளர் தர்விந்தர் சிங் மர்வாவிடம் தோல்வி அடைந்துள்ளார். தனது தோல்வியை ஒப்புக்கொள்வதாக சிசோடியா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, டில்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி. வெற்றியை வழங்கிய டில்லி மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்த பர்வேஷ், மோடியின் தொலைநோக்குப் பார்வையை டில்லிக்கு கொண்டு வரும் என பர்வேஷ் கூறினார். இதனிடையே, டில்லியில் பர்வேஷ் வர்மா-அமித்ஷா சந்திப்பு நடந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வை வெற்றி பெறச் செய்த டில்லி மக்கள், பேரவைத் தேர்தல்களில் ஆம் ஆத்மிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த நிலையில் 2025 பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. வுக்கு ஆதரவாக தங்களது பார்வையைத் திருப்பியுள்ளனர்.

1998 முதல் 2013 வரை டில்லியில் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ், கடந்த 2025, 2020 பேரவைத் தேர்தல்களில் தோல்வியை சந்தித்த நிலையில், 2025 பேரவைத் தேர்தலில் சில இடங்களையாவது கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் எந்தவொரு இடங்களிலும் வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து