முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரசாந்த் கிஷோர் அறிக்கை விஜய்யிடம் ஒப்படைப்பு

செவ்வாய்க்கிழமை, 11 பெப்ரவரி 2025      தமிழகம்
Vijay-2 2024-11-03

Source: provided

 சென்னை : தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அளித்த அறிக்கையை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் கட்சி நிர்வாகிகள் அளித்துள்ளனர்.

த.வெ.க.  தலைவர் விஜய்யை நேற்று சந்தித்த கட்சியின் நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆகியோர், பிரசாந்த் கிஷோர் அளித்த தேர்தல் வியூக அறிக்கையை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, நேற்று காலை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, கட்சித் தலைவர் விஜய் உடன், பிரசாந்த் கிஷோர், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க.  அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், நேற்று காலை கட்சியின் நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார்.

த.வெ.க.  பொதுச் செயலர் ஆனந்த், தேர்தல் பொதுச் செயலர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருடன் நேற்று காலை 2 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, த.வெ.க.  கட்சிக்கு உள்ள வாக்கு விகிதம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய அறிக்கையை பிரசாந்த் கிஷோர் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் த.வெ.க.  சார்பில், பல்வேறு கட்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடனான சந்திப்பும் நடைபெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து