Idhayam Matrimony

அலங்காநல்லூரில் சோகம்: ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2025      தமிழகம்
Mdu 2025-03-16

Source: provided

 மதுரை : மதுரை கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில்  நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் ஒருவர் பலியானார்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க.  சாா்பில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி, மேலூா் சட்டப்பேரவைத் தொகுதி தி.மு.க.  சாா்பில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

போட்டியின் தொடக்க நிகழ்ச்சி, காலை 7 மணிக்கு தொடங்கியது. மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க.  செயலரும், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கொடி அசைத்துப் போட்டியைத் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியைக் காண விரும்பும் மக்களின் வசதிக்காக மதுரையின் பல்வேறு பகுதிகளிலிருந்து கீழக்கரைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டில் பங்கேற்ற கச்சிராயிருப்பைச் சேர்ந்த மகேஷ் பாண்டி, மாடு முட்டியதில் படுத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நுரையீரல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதில் தொடர்ந்து ரத்த கசிவு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சீனாவில் இருந்து விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இளைஞர் ஜல்லிக்கட்டில் பங்கேற்றபோது மாடு முட்டி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து