Idhayam Matrimony

தங்கத் தேர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2025      தமிழகம்
Sekarbabu-2023 04 06

Source: provided

சென்னை : இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.31 கோடியில் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் 4 தங்கத் தேர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பக்தர்களின் நேர்த்திக்கடனுக்காக பயன்பாட்டிற்கு வரும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை திருவல்லிக்கேணி, திருவட்டீஸ்வர சுவாமி கோயில் திருத்தேர் வெள்ளோட்டத்தில் கலந்து கொண்டு திருத்தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் உள்ள கோயில்களிள் திருப்பணிகள், பழுதடைந்த திருத்தேர்களை சரி செய்வது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், புதிய தேர்கள் கட்டுவது என வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு திருத்தேர்பவனிகள் விமர்சையாக நடைபெற்று வருகிறது.

ரூ.74.51 கோடியில் 110 திருக்கோயில்களுக்கு 114 மரத்தேர்கள், ரூ.16.20 கோடியில் 64 மரத்தேர் மராமத்து பணிகள் உள்ளிட்டவை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 183 திருத்தேர் கோட்டைகள் அமைக்கப்படுகிறது. ரூ.31 கோடியில் 5 தங்கத் தேர்கள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் பெரியபாளையம் கோயில் தங்கத்தேர் தற்பொழுது பக்தர்களின் நேர்த்திக்கடனுக்காக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இன்னும் 4 தங்கத் தேர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வரும்.

சிதலமடைந்து உள்ள மரத்தேரை புனரமைத்து அம்மன் வீதி உலா வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மேலும் புதிய தேர் வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்காக ரூ. 76 லட்சம் மதிப்பில் புதிய தேர் அமைக்கும் பணி நடைபெற்று தற்போது பக்தர்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆற்காடு நவாப் தலைமையில் இருக்கக்கூடிய குடும்பத்திலிருந்து நாள்தோறும் கோயிலுக்கு பாலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 1000 ஆண்டு தொன்மையான கோயில்களை புனரமைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.125 கோடி மானியம் வழங்கியுள்ளார் என சேகர்பாபு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து