எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டெல்லி : இந்தியா வந்த அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார்.
அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான ஆட்சி அமைந்தது. அவரது அரசில் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட் உள்ளார். இந்நிலையில் துளசி கப்பார்ட் இந்தியா வருகை தந்துள்ளார். நேற்று காலை இந்தியாவுக்கு வருகை தந்த அவர் டெல்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பயங்கரவாதம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதற்கும், இரு நாட்டு உளவுத்துறை ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக இருவரும் பேசியதாக தெரிகிறது. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்திய எதிர்ப்பு காலிஸ்தான் பிரிவினைவாதிகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, பயங்கரவாத நிதி மற்றும் பணமோசடியை எதிர்ப்பதற்கான ஒத்துழைப்பு மற்றும் நாடுகடத்தல் மற்றும் குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்துள்ள துளசி கப்பார்ட், டெல்லியில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் ரெய்சினா பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக நாளைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். இதை முடித்துவிட்டு அடுத்து ஜப்பான், தாய்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு பயணிக்கிறார் துளசி கப்பார்ட்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |