முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவ்வையாரா..? அவ்வை யார்? ஆ...சட்டசபையில் அறிவுக்களஞ்சிய விவாதம்

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      தமிழகம்
Tamilnadu-Assemble 2024-12-02

Source: provided

சென்னை: ஐந்து அவ்வையாரில் எந்த அவ்வையாரை உறுப்பினர் குறிப்பிடுகிறார் என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் வேதாரண்யம் தொகுதி துளியாப்பட்டினத்தில் அவ்வையாருக்கு  மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் அறிவுக்களஞ்சியம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என்று வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கையில், "அவ்வையார் என்பது ஒருவரல்ல, அவ்வையார் என்பது ஐந்து பேர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அறம் செய்ய விரும்பு என பாடும் அவ்வையார் வேறு, புறநானூறு பாடும் அவ்வையார் வேறு. எனவே ஐந்து அவ்வையாரில் எந்த அவ்வையாரை உறுப்பினர் குறிப்பிடுகிறார்..?" என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இதற்கு பதில் அளித்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "இதுவரை அனைவரும் அவ்வையார் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம். தற்போது தான் அவ்வை யார் ? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அவ்வையார் என்பது பெண் இனத்திற்கு ஒரு குறியீடாக எடுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே விடுதலைப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்களுக்கு அமைக்கப்படும் நினைவு மண்டபங்கள், படிப்பகங்களாக அமைய வேண்டும் என்பது முதல்வரின் எண்ணம். எனவே அவ்வையார் அறிவுக்களஞ்சியம் அமைகக் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து