முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம்: அமைச்சர் பெரியகருப்பன்

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      தமிழகம்
Periyakaruppan 2023 06 27

Source: provided

சென்னை : தமிழகத்தில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரத்தின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி,  கீழ் பென்னாத்தூர்  மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள துணைக் கிராமங்களில் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் அமைக்க அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதிலளித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது, தி.மு.க. ஆட்சியமைந்த பின் இதுவரை 3 ஆயிரத்திற்கும் அதிகமான நியாய விலைக்கடைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் துணை சபாநாயகர் பிச்சாண்டியின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து சேதுபாவாசத்திரம், கொளக்குடி ஊராட்சியில் முழுநேர நியாயவிலை கடைக்கு கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கேள்வி எழுப்பினார்.

இதில் பதில் அளித்த அமைச்சர் பெரிகருப்பன், தமிழகத்தில் உள்ள 34,902 ரேசன் கடைகளில், 6,218 ரேசன் கடைகள் தனியார் மற்றும் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் 2,545 கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து கடைகளுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படும் என்று பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து