எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காந்திநகர் : கடின காலங்களில் விராட் கோலி தனக்கு ஆதரவு கொடுத்ததாக முகமது சிராஜ் கூறியுள்ளார்.
தீவிர பயிற்சி...
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதையொட்டி 10 அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத் அணியில் சிராஜ்...
முன்னதாக இந்த சீசனுக்கான வீரர்களின் மெகா ஏலம் கடந்த வருடம் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜை ரூ.12.25 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. இவர் கடந்த காலங்களில் விராட் கோலியுடன் இணைந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக தற்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
விராட் கோலி ஆதரவு...
அறிமுகம் ஆன புதிதில் ரன்களை வாரி வழங்கியதால் ரசிகர்களால் கிண்டலடிக்கப்பட்ட அவருக்கு விராட் கோலி பெருமளவில் ஆதரவு கொடுத்தார். அதன் பின் எழுச்சி பெற்ற அவர் தற்போது சிறப்பாக செயல்பட்டு முன்னணி வீரராக வலம் வருகிறார். இந்நிலையில் பெங்களூரு அணியிலிருந்து வெளியேறுவது உணர்வுபூர்வமாக கடினமாக இருப்பதாக சிராஜ் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். ஏனெனில் கடின காலங்களில் விராட் கோலி அவருக்கு ஆதரவு கொடுத்ததாக கூறியுள்ளார்.
கடினமாக உள்ளது...
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "புதிய சீசனுக்கு முன்னதாக குஜராத்தில் இணைவது ஒரு நல்ல உணர்வை கொடுக்கிறது. அதேவேளை கடினமான காலங்களில் விராட் எனக்கு நிறைய ஆதரவளித்ததால், ஆர்.சி.பி.யை விட்டு வெளியேறுவது எனக்கு கொஞ்சம் உணர்வுபூர்வமாக கடினமாக உள்ளது. ஆனால் இங்கேயும் கில்லின் தலைமையின் கீழ் எங்களுக்கு ஒரு அருமையான அணி உள்ளது" என்று கூறினார். இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் ஆட்டம் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


