முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் சீனாவுக்கு தைவான் கண்டனம்

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      உலகம்
Taiwanese-Fisher-2025-03-22

தைபேய் சிட்டி, தைவான் நாட்டு கடல் பகுதியில் சீனா சட்டவிரோதமாக மீன்பிடிப்பதற்கு அந்நாட்டின் கடலோரக் காவல் படை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தெற்கு சீனக் கடலிலுள்ள தைவான் நாட்டின் தோங்ஷா தீவுகளின் அருகில் கடந்த பிப்.15 அன்று சீனாவைச் சேர்ந்த 6 பெரிய கப்பல்களுடன் 29 மீன்பிடி படகுகள் சட்டவிரோதமாக மீன்பிடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு சென்று தைவானின் கடலோரக் காவல் படையினர் அந்த படகுகளை அப்புறப்படுத்தியபோது சீன கடலோரக் காவல் படையின் கப்பல்கள் தைவானின் கடல் பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறப்படுகின்றது.

இதுகுறித்து தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில், பிப்.15 சம்பவத்தைத் தொடர்ந்து தைவான் கடல் பகுதியில் சீனப் படகுகள் நுழைவதைத் தடுக்க கடந்த பிப்.26 அன்று தோங்ஷா தீவுகளை சுற்றி ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது, சீனாவைச் சேர்ந்த ’யூயிராயு 23588’ என்ற மீன்பிடி படகை பிடித்தாகவும் ஆனால், அப்போது சீனக் கடலோரக் காவல் படையினர் மீண்டும் தலையிட்டதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், சீனாவின் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மார்ச் 11,12 மற்றும் 18 ஆகிய நாள்களில் தொடர்ந்து நடைபெற்றதாகக் குறிபிடப்படும் நிலையில் இந்தத் தலையீடு தங்களது நாட்டின் இறையாண்மைக்கு ஒரு சவாலாகவுள்ளதாகக் கூறி தைவான் கடலோரக் காவல் படை கண்டித்துள்ளது.

முன்னதாக, தைவானின் தோங்ஷா தீவைச் சுற்றியுள்ள பகுதிகள் அந்நாட்டின் பாதுகாக்கப்பட்ட சரணாலயம் ஆகும் அப்பகுதியில் வர்த்தகம் மற்றும் தனிமனித ரீதியான மீன்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சீனாவின் கடல் வளம் தொடர்ச்சியான மீன்பிடிப்பினால் கடுமையாக பாதிப்படைந்துள்ளதினால் அந்நாட்டு மீனவர்கள் தைவான் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து