எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : 43 வயதான மகேந்திர சிங் டோனி தனது 18-வது ஐ.பி.எல். சீசனில் விளையாட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான அவர், தற்போது அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுகிறார். இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவரது மைல்கல் சாதனைகளை பார்க்கலாம்.
மவுசு குறையவில்லை...
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் டோனிக்கான மவுசு என்பது இம்மியளவும் குறையவில்லை. சி.எஸ்.கே. அணியின் சொந்த மைதானமான சென்னை மட்டுமல்லாது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் விளையாட செல்லும் இடமெல்லாம் மஞ்சள் படைகள் படையெடுப்பே அதற்கு சான்று. புள்ளிவிவரங்கள், அதன் நம்பர்கள் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டவர் டோனி. விளையாட்டை நேசிக்கும் அனைவரும் இதை ஏற்பாளர்கள். இருப்பினும் ஐ.பி.எல். களத்தில் அவரது நம்பரும் பேசுகிறது.
அதிக முறை...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை பட்டம் வென்று கொடுத்த கேப்டன். 10 முறை ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சென்னை விளையாடி உள்ளது. டோனி தலைமையிலான சி.எஸ்.கே. அதிக முறை அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதோடு 2010, 2014 ஆகிய சீசன்களில் டோனி தலைமையிலான சென்னை அணி சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பட்டம் வென்றுள்ளது.
252 சிக்ஸர்கள்...
ஐ.பி.எல். களத்தில் டோனி மொத்தமாக 264 போட்டிகளில் விளையாடி 5,243 ரன்களை எடுத்துள்ளார். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் 234 போட்டிகளில் விளையாடி 4,669 ரன்கள் எடுத்துள்ளார். 149 கேட்ச் மற்றும் 41 ஸ்டம்பிங் செய்துள்ளார். ஒரு இன்னிங்ஸில் அவர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்கள் 84. மொத்தம் 252 சிக்ஸர்களை விளாசி உள்ளார். அவரது விக்கெட் கீப்பிங் திறனுக்கு நிகரானவர் சர்வதேச கிரிக்கெட்டில் கூட இன்று இல்லை என்று சொல்லலாம்.
பின்புலம்...
டோனி என்பவர் அனைவருக்கும் பிடித்த போக முக்கிய காரணம் அவரது பின்புலம். அவர் கிரிக்கெட்டில் சாதித்த அவரது விடாமுயற்சி, மன உறுதியின் காரணமாகவே அவருக்கு செல்லும் இடமெல்லாம் வரவேற்பு கிடைக்க காரணம்.
சீசன் வாரியாக செயல்பாடு...
கடந்த 2024 சீசனில் நீளமான முடி வைத்து ரசிகர்களை கவர்ந்தார். கடைசி சில ஓவர்களில் களத்துக்கு வந்து சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை குஷி படுத்தினார்.
2023 சீசனில் அவரது தலைமையிலான சி.எஸ்.கே. அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
2022 சீசனில் அணியில் கேப்டன்சி மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் சி.எஸ்.கே. வெளியேறியது. இந்த சீசனில் 232 ரன்களை டோனி எடுத்தார்.
2021 சீசனில் டோனி தலைமையிலான அணி சாம்பியன்ஸ் பட்டம் வென்றது. கரோனா பரவல் காரணமாக இந்த சீசனில் பிற்பாதி போட்டிகள் அமீரகத்தில் நடைபெற்றது.
2020 சீசனில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றோடு வெளியேறியது. அப்போது இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என டோனி பேசி இருந்தார். இந்த சீசனில் 200 ரன்களை டோனி எடுத்தார்.
2019 சீசனில் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் ஆனார் டோனி. மொத்தம் 416 ரன்கள் எடுத்தார்.
2018 சீசனில் இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். அரங்கில் விளையாடியது. அப்போது மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது சி.எஸ்.கே.. இந்த சீசனில் 455 ரன்களை டோனி எடுத்தார்.
2017 சீசனில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக டோனி விளையாடி இருந்தார். அந்த முறை இரண்டாவது இடம் பிடித்து புனே அணி தொடரை நிறைவு செய்தது. அந்த அணிக்காக டோனி 574 ரன்களை 30 போட்டிகளில் எடுத்தார்.
2016 சீசனில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியை டோனி கேப்டனாக வழிநடத்தினார். இந்த சீசனில் 284 ரன்களை டோனி எடுத்தார்.
2015 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடம் பிடித்தது. இந்த சீசனில் 372 ரன்களை டோனி எடுத்தார்.
2014 சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது. இந்த சீசனில் 371 ரன்களை டோனி எடுத்தார்.
2013 சீசனில் இரண்டாம் இடம் பிடித்தது சென்னை. இந்த சீசனில் 461 ரன்களை டோனி எடுத்தார்.
2012 சீசனில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது சி.எஸ்.கே.. இந்த சீசனில் 358 ரன்களை டோனி எடுத்தார்.
2011 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சீசனில் 392 ரன்களை டோனி எடுத்தார்.
2010 சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது டோனி தலைமையிலான சி.எஸ்.கே.. இந்த சீசனில் 287 ரன்களை டோனி எடுத்தார்.
2009 சீசனில் அரை இறுதியில் சி.எஸ்.கே. விளையாடி இருந்தது. இந்த சீசனில் 332 ரன்களை டோனி எடுத்தார்.
2008 சீசனில் இறுதிப் போட்டியில் சி.எஸ்.கே. விளையாடி இருந்தது. இந்த சீசனில் 414 ரன்களை டோனி எடுத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
13 Dec 2025சென்னை, இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த முன்னாள் விமானப்படை அதிகாரி கைது
13 Dec 2025திஸ்பூர், பாகிஸ்தானுக்கு ரகசிய ஆவணங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக உளவு பார்த்த முன்னாள் இந்திய விமான படைத்தலைவர் கைது செய்யப்பட்டார்.
-
உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல்-2 பேர் பலி
13 Dec 2025கீவ், உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
16 சதவீதம் ஜி.எஸ்.டி.பி. வளர்ச்சியுடன் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
13 Dec 2025சென்னை, மத்திய அரசின் ஆதரவு பெருமளவு இல்லாமல் ஜி.எஸ்.டி.பி.
-
வன்னியர்களுக்கு 13 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. அமைச்சர் பெரியசாமி பேச்சு
13 Dec 2025திண்டுக்கல், வன்னியர்களுக்கு 13 சதவீரம் இடஓதுக்கீடு வழங்கியது தி.மு.க.தான் என்று அமைச்சர் பெரியசாமி பேசினார்.
-
முதல்கட்டமாக திருவண்ணாமலையில் இன்று நடைபெறுகிறது: தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு: முதல்வர் முக.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
13 Dec 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் இன்று முதற்கட்டமாக தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு நடைபெறுகிறது. தி.மு.க.
-
தமிழ்நாட்டில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்: வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
13 Dec 2025சென்னை, தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
-
மெஸ்ஸியுடன் ஷாருக்கான் சந்திப்பு
13 Dec 2025கொல்கத்தாவில், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 13-12-2025
13 Dec 2025 -
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்
13 Dec 2025கரூர், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
-
முதியவர்களை குறிவைத்து மோசடி: அமெரிக்காவில் இந்தியருக்கு சிறை
13 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் முதியவர்களை குறிவைத்து ரூ.62 கோடி மோசடி செய்த இந்தியருக்கு ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரி ரேஷன் கடை விவகாரம்: விஜய் பேசியது குறித்து த.வெ.க. நிர்வாகி விளக்கம்
13 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் த.வெ.க.
-
வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
13 Dec 2025மதுரை, வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் 6 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத
-
திருவண்ணாமலையில் இன்று தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
13 Dec 2025சென்னை, திருவண்ணாமலையில் இன்று நடக்கும் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல சந்திப்பு கூட்டத்திற்கு கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
-
பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: டெல்லியில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி
13 Dec 2025டெல்லி, பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினமான நேற்று பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் மலர் தூவி மரிய
-
திருவனந்தபுரத்தில் வரலாற்று வெற்றியை பெற்ற பா.ஜ.க.: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
13 Dec 2025திருவனந்தபுரம், திவனந்தபுரத்தில் வரலாற்று வெற்றியை பா.ஜ.க.வுக்கு பெற்று தந்த கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
-
இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் சூர்யவன்ஷி புதிய சாதனை
13 Dec 2025துபாய், இளையோர் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற புதிய சாதனையை இந்தியாவின் இளம் வீரர் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
8 அணிகள்...
-
கேரள மாநில உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப். பெரும்பாலான இடங்களில் வெற்றி
13 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
-
கொல்கத்தா லேக் டவுன் பகுதியில் தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார் மெஸ்சி
13 Dec 2025கொல்கத்தா, கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள தனது முழுவுருவச்சிலையை மெஸ்சி நேற்று திறந்து வைத்தார்.
-
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் டிச. 31க்குள் அமல்படுத்தப்படும் டாஸ்மாக் திட்டவட்டம்
13 Dec 2025சென்னை, காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் வருகிற 31-ம் தேதிக்குள் அமல்படுத்தப்படும் என்று டாஸ்மாக் உத்தரவாதம் அளித்துள்ளது.
-
மதுரையில் வரும் 17-ம் தேதி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Dec 2025சென்னை, மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
'சால்ட் லேக்' மைதானத்தில் சில நிமிடங்கள் இருந்த மெஸ்சி: கோபத்தில் ரசிகர்கள் கலவரம்
13 Dec 2025அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார்.
-
டெல்லியில் காற்று மாசுபாடு: மக்களின் உடல்நலம் பாதிப்பு
13 Dec 2025புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
-
மேகதாது அணை விவகாரத்தில் மறுசீராய்வு மனு: தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி
13 Dec 2025சென்னை, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் பட்டம் பெற்ற மாணவர்கள் அவர்கள் நாட்டுக்கே செல்ல வேண்டும்: அதிபர் ட்ரம்ப்
13 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் பட்டம் பெற்ற பிறகு இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் நாடு திரும்ப வேண்டியிருப்பது அவமானம் என அமெரிக்க அதிபர் கொனால்டு ட்ரம்ப் தெரிவித


