Idhayam Matrimony

வக்பு சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது: கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2025      இந்தியா
Pinaraye 2024-12-04

திருவனந்தபுரம், வக்பு திருத்த  புதிய சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது, பாரபட்சமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். 

முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியாதவது: வக்பு திருத்த  புதிய சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது, பாரபட்சமானது. முனம்பம் மக்களின் பிரச்சினையை  வக்புடன் தொடர்புபடுத்தி சிலர் இதில் குழப்பத்தை உண்டாக்கி, ஆதயம் பெறலாம் என்று நினைக்கின்றனர். அதாவது குட்டையைக் குழப்பி மீன்பிடிப்பது எனச் சொல்வது போல ஆர்.எஸ்.எஸின் மிக முக்கியமான செயல்திட்டம் பா.ஜ.க.விடம் உள்ளது.  

வக்பு சட்டம் நம் நாட்டின் மத நம்பிக்கை மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை மீறுகிறது. முஸ்லிம்களை ஓரங்கட்டுவதற்கான வாய்ப்பாகவும் அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்பாகவும் ஆர்.எஸ்.எஸ். இதைப் பார்க்கிறது.  முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை மட்டுமே அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுதான் அவர்களின் அணுகுமுறை.

மத்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிரான, பெரும்பான்மையினரைத் திருப்திப்படுத்தும் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதனால்தான் கேரள சட்டப்பேரவை அச்சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இடதுசாரிக் கட்சிகளும் அச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்த்தனர்" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து