எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தங்கம் விலை நேற்று (ஏப்.23) பவுனுக்கு ரூ.2,200 என குறைந்து ஒரு பவுன் ரூ.72,120-க்கு விற்பனையானது. தங்கம் கிராமுக்கு ரூ.275 குறைந்து ஒரு கிராம் ரூ.9,015-க்கு விற்பனையானது.
உலக அளவில் தங்கத்துக்கு டிமாண்ட் அதிகம் உள்ளது. அதன் காரணமாக சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதன் விலை ஏற்ற இறக்குத்துடன் இருப்பது வழக்கம். இருப்பினும் இந்தியாவில் அண்மையில் வரலாறு காணாத வகையில் புதிய விலை உச்சத்தை எட்டி இருந்தது தங்கம் விலை. இந்த நிலையில் நேற்று (ஏப்.23) தங்கம் விலை குறைந்து விற்பனையானது.
நேற்று (ஏப்.23) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 குறைந்து விற்பனையானது. ஒரு கிராம் ரூ.275 என விலை சரிந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.72,120 மற்றும் ஒரு கிராம் தங்கம் ரூ.9,015-க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் (ஏப்.22) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் மீதான விலை பவுனுக்கு ரூ.2,200 என உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
வரும் 30-ம் தேதி அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க விரும்பும் மக்கள் தங்கத்தின் விலை மேலும் குறைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததும் அண்மைய விலை ஏற்றத்துக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


