முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து: நூற்றுக்கணக்கானோர் காயம்

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      உலகம்
IRAN 2025-04-26

Source: provided

ஈரான் : ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 406 பேர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 406 பேர் காயமடைந்ததாகவும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்கலன்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த விபத்தின்போது, அதிகளவில் கரும்புகை எழுந்ததை அப்பகுதியில் இருந்தோர் விடியோ பதிவு செய்தனர்.

விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து ஒரு கி.மீ. சுற்றளவில் உள்ள கட்டடங்களின் கண்ணாடிகள் உடைந்ததாக அப்பகுதியினர் கூறுகின்றனர். இங்கு எண்ணெய் மற்றும் வேதிப்பொருள்கள் அடங்கிய கொள்கலன்களும் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டின் எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவிகித வர்த்தகம் இங்கிருந்து நடைபெறுகிறது. ஆண்டுக்கு 80 மில்லியன் டன் பொருள்களை இந்த ஏற்றுமதி நிலையம் கையாள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து