முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டாயக்கல்வி திட்டம்: மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடரும் பணி தொடக்கம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      தமிழகம்
Anbil-Mahesh 2024-12-04

தஞ்சாவூர், கல்வி நிதி தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழைக்குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த திட்டத்திற்கான பங்குத்தொகையை கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், புதிய கல்விக்கொள்கையில் தமிழக அரசு கையெழுத்திடாததால் கட்டாயக்கல்வி சட்டத்தின்கீழ் ஏழை குழந்தைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கான பங்கு ஒதுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.

கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கட்டாயக்கல்வி திட்டத்தின்கீழ் ஏழைக்குழந்தை களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டை தனியார் பள்ளிகள் அமல்படுத்தவில்லை.  இதனால், ஏழைக்குழந்தைகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களின்  கேள்விக்கு பதில் அளித்த அவர்,   கட்டாயக்கல்விக் கொள்கை நிதி தொடர்பாக கடந்த 16 மற்றும் 17 ஆகிய 2 நாட்கள் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் டெல்லி சென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கட்டாயக்கல்வி திட்டம் தொடர்பாக மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லையென்றால் வழக்கு தொடருவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி, கல்வி நிதி தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக வழக்குத்தொடர்வதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது' என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து