எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அகமதாபாத் : மிகப் பெரிய தருணங்களில் அமைதியாக இருப்பதில் கவனம் செலுத்தினேன் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
குவாலிபையர் 2...
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாதில் நேற்று முன்தினம் நடைபெற்ற குவாலிபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. அதிரடியாக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
ரகசியம் தெரியாது...
அதிரடியாக விளையாடி பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற உதவிய ஷ்ரேயாஸ் ஐயர், மிகப் பெரிய தருணங்களில் நன்றாக விளையாடுவது தனக்கு மிகவும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நேர்மையாக கூறவேண்டுமென்றால், என்னுடைய வெற்றியின் ரகசியம் என்னவென்று எனக்குத் தெரியாது. மிகப் பெரிய தருணங்கள் எனக்கு பிடிக்கும். மிகப் பெரிய தருணங்களில் எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு பெரிய முடிவுகள் உங்களுக்கு கிடைக்கும் என எனக்கும், அணி வீரர்களிடத்திலும் எப்போதும் கூறுவேன்.
அமைதியாக இருப்பதில்...
மும்பைக்கு எதிரான போட்டி அதற்கான சரியான உதாரணம் என நினைக்கிறேன். மிகவும் பதற்றமாக இருப்பதைக் காட்டிலும், அமைதியாக இருப்பதில் கவனம் செலுத்தினேன். போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தை பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் அனைவரிடத்திலும் பார்க்க முடிந்தது. பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடினார்கள் என்றார். அகமதாபாதில் இன்று (ஜூன் 3) நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


