எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ம் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனைத்தொடந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 21, 22-ம் தேதிகளில் விலை அதிகரித்து, 23-ம் தேதி விலை குறைந்தது. அதேபோல், 24, 25-ம் தேதி உயர்ந்து, கடந்த 3 நாட்களுக்கு முன்பு குறைந்து காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மீண்டும் உயர்ந்தது.
கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 950-க்கும், ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.45-ம், பவுனுக்கு ரூ.360-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 995-க்கும், ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 960-க்கும் விற்பனை ஆனது.
இந்த நிலையில், தங்கம் விலை நேற்று (புதன்கிழமை) சற்று குறைந்து விற்பனை ஆனது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.71,480-க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.8,935-க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


