எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அசாம்: வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழைக்கு இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழையால் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அசாமில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை வெள்ளத்தால் சுமார் 2.64 லட்சம் பேர் வீடு, உடைமைகளை இழந்து உள்ளனர்.
வடகிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அசாமில் 10 பேர், அருணாச்சல பிரதேசத்தில் 9 பேர், மேகாலயாவில் 6 பேர் மிசோரமில் 5 பேர் உட்பட வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய ராணுவம், விமானப் படை, அசாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த வீரர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மணிப்பூரில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து உள்ளனர். அந்த மாநிலத்தில் சுமார் 5,000 வீடுகள் இடிந்துள்ளன. திரிபுராவில் சுமார் 10 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மிசோரமின் மலைப் பகுதிகளில் 211 நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிசோரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமன்றி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


