முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றிக்கொண்டாட்டத்தில் சோகம்: பெங்களூரு வீரர்களை காண திரண்ட ரசிகர்கள் நெரிசலில் சிக்கி 11 பேர் பலி

புதன்கிழமை, 4 ஜூன் 2025      விளையாட்டு
Suicide 2023 04 29

பெங்களூரு, சாம்பியன் கோப்பையுடன் திரும்பிய பெங்களூரு அணி வீரர்களை காண ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

நேற்று முன்தினம் நடந்த பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 18 ஆண்டு கால பிரீமியர் லீக் வரலாற்றில் முதல்முறையாக பெங்களூரு மகுடத்தை சூடியது. இதனை பெங்களூரு அணி ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், கோப்பையை வென்ற பெங்களூரு அணியினர் நேற்று சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்களை கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார். தொடர்ந்து, கோப்பையை ஏந்தியபடி கோலி பேருந்தில் அமர்ந்த நிலையில், பெங்களூரு வீரர்கள் ஊர்வலமாக சென்றனர். நேற்று மாலை சின்னசாமி மைதானத்தில் வீரர்களை கவுரவிக்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, அங்கு ஆயிரக்கணக்கானோர் ஒரே சமயத்தில் திரண்டனர்.

இதனால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. பலர் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். பலர் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடம் என்று கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து