Idhayam Matrimony

ராமதாசுடன் குருமூர்த்தி, சைதை துரைசாமி சந்திப்பு: பின்னணி என்ன?

வியாழக்கிழமை, 5 ஜூன் 2025      தமிழகம்
Ramadoss 2023-07-28

விழுப்புரம், ராமதாசுடன் குருமூர்த்தி, சைதை துரைசாமி சந்தித்ததன் பின்னணி குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற இருக்கின்ற சட்டசபை தேர்தலுக்கு இப்போதே அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த சட்டசபை (2021) தேர்தலில் இதே கூட்டணியில் பா.ம.க.வும் இடம் பெற்றிருந்தது. ஆனால், தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே இருந்த முரண்பாடு சமீபத்தில் மோதலாக வெடித்தது.

இந்த நிலையில், நேற்று காலை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்ற அன்புமணி, தனது தந்தை ராமதாசை சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. அதில், உடன்பாடு ஏற்பட்டதா?, இல்லையா? என்ற தகவல் வெளியாவதற்கு முன்பு, அ.தி.மு.க.வை சேர்ந்த சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி ஆகியோர் ராமதாசை சந்தித்து பேசினார்கள்.

தந்தை - மகன் இருவருக்கு இடையேயும் உள்ள பிணக்கை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. மத்திய மந்திரி அமித்ஷா வரும் 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வர இருக்கிறார். அன்று மாலை 4 மணிக்கு ஒத்தக்கடை அருகே பிரமாண்டமாக நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்க இருக்கிறார். எனவே, அதற்கு முன்னதாக பா.ம.க.வை வழிக்கு கொண்டுவரவே இந்த முயற்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த குருமூர்த்தி, "பா.ஜ.க.வுக்காக நான் தைலப்புரம் வரவில்லை. எனது நீண்ட கால நண்பர்  ராமதாசை சந்தித்து பேசினேன்.வேறு ஏதும் இல்லை.  அன்புமணி வந்ததே எனக்கு தெரியாது. "இவ்வாறு அவர் கூறினார். டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமாதானம் பேச வந்தீர்களா என்ற கேள்விக்கு இல்லை என்று ஆடிட்டர் குருமூர்த்தி பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து