எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: தமிழ்நாட்டில் 136 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு இணைய வழி குற்றப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு இணைய வழி குற்றப்பிரிவு மாநிலம் முழுவதும் நடத்திய அதிரடி கைது நடவடிக்கை "ஆபரேஷன் திரைநீக்கு-2" ஜூன் 2-ம்தேதி தொடங்கி 2025 ஜூன் 3-ம்தேதி முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும், நகரத்திலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, இணையவழி குற்றப்பிரிவின் தலைமையாகதில் உள்ள பிரதான கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் மொத்தம் 136 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழக சைபர் குற்ற காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 159 வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய கைதுகள் மாநிலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட இணையக் குற்றங்களை தடுப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் குறிக்கின்றன. இதில் 125 கைப்பேசிகள், 304 வங்கி கணக்குகள், 88 காசோலைகள், 107 டெபிட்/கிரெடிட் கார்டுகள், 35 கணினிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தேசிய அளவில் நடத்திய பெரிய அளவிலான சைபர் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாகும்.
நீங்கள் ஏதேனும் சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று சந்தேகித்தால் அல்லது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்தால், உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம். நிதி மோசடிகள் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930-ஐ டயல் செய்யவும் அல்லது www.cybercrime.gov.in இல் புகார் அளிக்கவும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


