Idhayam Matrimony

காயிதே மில்லத் பிறந்த நாள்: முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழஞ்சலி

வியாழக்கிழமை, 5 ஜூன் 2025      தமிழகம்
CM-2-2025-06-05

சென்னை, மறைந்த அரசியல் தலைவர் காயிதே மில்லத் பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “எவரும் குறைகாண முடியாத அப்பழுக்கற்ற வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். இஸ்லாமிய சமூகத்தின் இணையற்ற தலைவர். தந்தை பெரியாரால் அரிய தலைவர் எனப் போற்றப்பட்டவர். தலைவர் கலைஞரின் மீது அன்பைப் பொழிந்தவர். 1967-இல் கழகம் ஆட்சியமைக்கத் துணை நின்றவர்.

நாட்டுப்பற்றிலும் மொழிப்பற்றிலும் எஃகு போன்ற உறுதியைக் காட்டிய கண்ணியத்தென்றல் காயிதே மில்லத் பிறந்தநாள். காயிதே மில்லத் பிறந்த திருநெல்வேலி மாவட்டத்தில் அமையவுள்ள மாபெரும் நூலகத்துக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என அறிவித்த மனநிறைவோடு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன்.” என்று சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்: “இந்த நாளில் அன்னைத் தமிழை தேசிய ஆட்சிமொழியாக அரியணை ஏற்றவும், மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அவர் ஆற்றிய பணிகளை நினைவு கூர்வோம். அவர் விரும்பியவாறு அன்னைத் தமிழுக்கு அரியணை பெற்றுத் தரவும், மக்கள் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் இந்த நாளில் உறுதியேற்போம்.” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ் மண்ணில் நல்லிணக்கத்திற்காகத் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தலைவர், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் , சமூக ஒற்றுமைக்காக நேர்மையான, தூய்மையான பாதையில் பயணித்த அன்னாரது பிறந்த நாளில் அவரது சேவைகளை நினைவுகூர்ந்து போற்றி மகிழ்வோம்.” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து