முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்கள் மீட்பு

புதன்கிழமை, 4 ஜூன் 2025      இந்தியா
Three-indians-rescue-2025-0

புதுடெல்லி, ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்கள் தெஹ்ரான் போலீஸாரால் மீட்கப்பட்டதாக இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்களை தெஹ்ரான் போலீஸார் கண்டுபிடித்து விடுவித்ததாக ஈரானில் உள்ள உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன என்று ஈரான் தூதரகம் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்டதாக மே 1 அன்று தெஹ்ரான் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. பஞ்சாபைச் சேர்ந்த மூன்று பேரும் ஆஸ்திரேலியா செல்லும் வழியில் மே 1 அன்று ஈரானுக்கு வந்திருந்தனர். ஒரு உள்ளூர் பயண நிறுவனம் அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் நல்ல ஊதியம் தரும் வேலைகளை பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தது. இருப்பினும், ஈரானை அடைந்த சிறிது நேரத்திலேயே அவர்கள் 3 பேரும் காணாமல் போனார்கள்.

இந்த வழக்கு விசாரணையில் இருப்பதாக இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் மே 29 அன்று தெரிவித்திருந்தது. மூன்று இந்தியர்களின் வழக்கை ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் தூதரக விவகாரத் துறை, தொடர்புடைய நீதித்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து விசாரித்து வருவதாக ஈரான் தூதரகம் தெரிவித்தது. இதனையடுத்து தெற்கு தெஹ்ரானில் அமைந்துள்ள வரமின் என்ற நகரத்தில் மூன்று பேரும் மீட்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து