முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிக்கிம் நிலச்சரிவால் சிக்கி தவித்த 34 சுற்றுலா பயணிகள், ராணுவ வீரர்கள் மீட்பு

புதன்கிழமை, 4 ஜூன் 2025      இந்தியா
Sikkim-2025-06-04

சாட்டன், வடக்கு சிக்கிமில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாட்டன் பகுதியில் இருந்து நேற்று 27 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 7 ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 34 பேர் விமானம் மூலமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

சிக்கிமில் மோசமான வானிலை தொடர்ந்து நிலவும் நிலையில், அவசரகால மீட்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முதல் வெற்றிகரமான வான்வழி வெளியேற்றம் இதுவாகும். சாட்டனில் இருந்து பாக்யோங் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கு இரண்டு எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டர்கள் வெற்றிகரமாக 34 பேரை விமானம் மூலம் மீட்டுச் சென்றன. மீட்கப்பட்டவர்களில் ஏழு ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 27 சுற்றுலாப் பயணிகள் அடங்குவர். 

இதில் காயமடைந்தவர்கள் சிலரும் விமானத்தில் இருந்தனர். தற்போது அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் டீஸ்டா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாட்டனில் உள்ள ராணுவ முகாமில் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், ஆறு வீரர்கள் காணாமல் போயினர்.

காணாமல் போன ஆறு ராணுவ வீரர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் அத்தியாவசிய நிவாரண உபகரணங்களுடன் 23 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சாட்டனில் களமிறங்கியுள்ளனர். நிலச்சரிவால் சாலைகள் கடுமையாக சேதமடைந்ததால், மாற்று போக்குவரத்துப் பாதைகளை தேசிய பேரிடர் மீட்புப் படை கண்டறிய தொடங்கியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து