முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். தீவிரவாதிகளுக்கு உதவி: காஷ்மீரில் 3 ஊழியர்கள் நீக்கம்

புதன்கிழமை, 4 ஜூன் 2025      இந்தியா
Jammu- -Kashmir

ஸ்ரீநகர், காஷ்மீரில் தீவிரவாத அமைப்புக்களுக்கு உதவியதாக காவலர் உட்பட 3 அரசு ஊழியர்களை துணைநிலை ஆளுநர் பணி நீக்கம் செய்தார்.

காஷ்மீர் துணைநிலை ஆளுநராக கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்ற மனோஜ் சின்ஹா, தீவிரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்த 75-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை அரசியல் சாசனத்தின் 311 (2)(சி)-வது பிரிவின் கீழ் பணி நீக்கம் செய்துள்ளார்.

அந்த வகையில், காவலர் மாலிக் இஷ்பக் நசீர், பள்ளி ஆசிரியர் அஜாஸ் அகமது மற்றும் ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரியின் இளநிலை பொறியாளர் வாசீம் அகமது கான் ஆகிய 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல்-முஜாஹிதீன் ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக புகார் எழுந்த நிலையில், மனோஜ் சின்ஹா அவர்களை பணி நீக்கம் செய்துள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் மற்றும் 25 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் 3 அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து