முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உமாபதி தயாரிக்கும் ஹும் திரைப்படம்

புதன்கிழமை, 18 ஜூன் 2025      சினிமா
Hum-movie 2025-06-18

Source: provided

ஃபர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் - ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஹும்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், பாடலாசிரியர் விவேகா, இயக்குநர்கள் எல். சுரேஷ், இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை இயக்குநர் கே பாக்யராஜ் வெளியிட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். விழாவில் தயாரிப்பாளர் உமாபதி பேசுகையில், என்னுடைய நண்பர் கிருஷ்ணவேல் ஒரு படத்தை தயாரித்து நிறைவு செய்திருந்தார். ஆள் இல்லாத படம் என்றார். அதன் பிறகு ஒரு நாள் அந்தப் படத்தை காண்பித்தார். அரை மணி நேரம் கடந்தது கூட தெரியவில்லை. சுவாரசியமாக இருந்தது. இதுவரை யாரும் அது போன்ற முயற்சியை மேற்கொண்டதில்லை. புதிதாக இருந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது அதன் பிறகு விவாதித்தோம். அதனைத் தொடர்ந்து அந்தப் படத்தை மீண்டும் தயாரிக்க தொடங்கினோம். நண்பர்களின் உதவியுடன் இப்படத்தின் பணிகளை இப்போது நிறைவு செய்திருக்கிறோம் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து