முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி, மதராசி கேம்ப் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்ட 360 தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் நிவாரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து நடவடிக்கை

புதன்கிழமை, 18 ஜூன் 2025      தமிழகம்
TN 2025-06-18

Source: provided

சென்னை : டெல்லி, மதராசி கேம்ப் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்ட 360 தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் நிவாரணம் அவர்களது வங்கி கணக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து வரவு வைக்கப்பட்டது. மேலும் 150 குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வரின் உத்தரவின்படி அமைச்சர் ஆவடி நாசர் ரூ.4 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப்பொருட்களை நேரில் வழங்கினார்.

தெற்கு டெல்லியின் கல்காஜி விரிவாக்கத்தில் உள்ள பூமிஹீன் முகாமில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் மூன்று நாட்களுக்குள் தாமாக முன்வந்து காலி செய்ய வேண்டும் என்று டெல்லி மேம்பாட்டு ஆணையம் அறிவித்திருந்தது. கடந்த ஜூன் 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்களுக்குள் குடியிருப்பாளர்கள் காலி செய்ய வேண்டும் என்றும், தவறினால் குடியிருப்புகளுக்குள் உள்ள பொருட்களுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும், திட்டமிட்டபடி இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இதனால், டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, குடியிருப்புவாசிகள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இன்று புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளன. பூமைதின் பகுதியில் குஹி-ஹொப்ரி என்ற பகுதியில் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 300 வீடுகளை அதிகாரிகள் இடித்தனர்.

இதையடுத்து, டெல்லி மதராஸி கேம்ப்பில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட 370 தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி அறிவித்தார். பாதிக்கப்பட்ட 370 குடும்பங்களுக்கும் ஒரு முறை நிதியுதவியாக தலா ரூ.8 ஆயிரம் வழங்கவும், ரூ.4 ஆயிரம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்தார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள மதராசி கேம்ப் குடியிருப்பு பகுதியில் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட 360 தமிழர் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.8000 நிவாரணத் தொகை செலுத்தப்பட்டது. மேலும் ரூ.4000 மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை முதற்கட்டமாக 150 குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வரின் உத்தரவின்படி அமைச்சர் ஆவடி நாசர் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து