முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

புதன்கிழமை, 18 ஜூன் 2025      இந்தியா
India-Meteorological

Source: provided

புதுடில்லி : தென்மேற்கு வங்கதேசம், அதை ஒட்டிய மேற்கு வங்கத்தில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அப்பகுதியில் நேற்று முன்தினம் காலை, புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது. தென்மேற்கு வங்க தேசம், மேற்கு வங்கம் ஒட்டி நிலவி வந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. தற்போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வருகிறது. தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து