முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி தொடர்: லீட்ஸ் பிட்ச்சில் முதலில் பீல்டிங் எடுத்தால் சாதகம்?

புதன்கிழமை, 18 ஜூன் 2025      விளையாட்டு
James-Anderson 2025-06-17

Source: provided

லண்டன் : இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை லீட்சில் தொடங்கும் ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி முதல் டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் பொதுவாக வறண்டிருக்கும் என்றும் டாஸ் வென்றால் முதலில் பவுலிங் எடுத்து முதல் நாள் பவுலிங் சாதக நிலைமைகளை அணிகள் பயன்படுத்தும் என்று பிட்ச் பராமரிப்பாளர் ரிச்சர்ட் ராபின்சன் தெரிவித்துள்ளார்.

பச்சைப்புல்வெளி...

இப்போதைக்குப் பிட்சைப் பார்த்தால் புற மைதானத்தின் பச்சைப்புல்வெளி போல் வித்தியாசம் இல்லாமல் உள்ளது, ஆனால் மேட்சிற்கு முன்னால் புற்கள் 8 மி.மீ.நீளம் வரை இருக்குமாறு வெட்டப்பட்டு விடும். பிட்ச் இப்போதைக்கு மூடிவைக்கப்பட்டிருக்கிறது, ஏனெனில் லீட்ஸில் 22-23 டிகிரி செல்சியசில் தொடங்கி 30 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அடிப்பதால் பிட்சைத் திறந்து வைத்தால் முதல் நாளே வறண்ட பிட்ச் ஆகிவிடும். ஆகவே மூடப்பட்டுள்ளது.

கொஞ்சம் பவுன்ஸ்... 

முதல் நாள் பிட்சில் பந்துகள் கொஞ்சம் பவுன்ஸ் ஆகும். ஸ்விங் ஆகும். ஆனாலும் பந்திற்கு நேரான டிரைவ்களை ஆட முடியும் என்கிறார் ராபின்சன். வெயில் அடிக்க பிட்ச் வறண்டு போகும். எனவே முதல் நாளுக்குப் பிறகு விரைவில் பிட்ச் ஃபிளாட் ஆக மாறும் என்பதால் முதல் நாள் பவுலிங் சாதக அம்சங்களைப் பயன்படுத்த டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்யும்.

9 வெற்றி - 6 தோல்வி...

கடந்த 22 டெஸ்ட் போட்டிகளில் லீட்ஸில் 16 டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வென்ற அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து இதில் 9 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் சந்தித்துள்ளது.. ஒவ்வொரு முறை முதலில் பேட்டிங் எடுக்கும் அணி தோல்வி கண்டுள்ளது. இங்கிலாந்து இதே ஹெடிங்லீயில் நியூஸிலாந்துக்கு எதிராக 4வது இன்னிங்சில் 296 ரன்களையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 251 ரன்களையும் எடுத்து வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதகமற்ற சூழ்நிலை...

பொதுவாகவே லீட்சில் அதிக ரன்களையும் அடிக்க முடியாது அதற்காக மிகவும் லோ ஸ்கோர் பிட்ச் ஆகவும் இருக்காது. 250-350 ரன்கள் பிட்ச் ஆக இருக்கும். இந்தியாவுக்கு சாதகமற்ற சூழ்நிலை என்னவெனில் சமீப ஆண்டுகளில் ஹெடிங்லேயில் இந்திய அணி ஆடியதில்லை என்பதே. 2021-ல் இன்னிங்ஸ் தோல்விக்கு முன்னர் 2002-ல் இங்கு ஆடியுள்ளனர். 2002-ல் கங்குலி தலைமையில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று ட்ரா செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து