முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்கு வலிமையுடன் பதிலளிக்க வேண்டும்: பினராயி

வியாழக்கிழமை, 7 ஆகஸ்ட் 2025      இந்தியா
Pinarayi-Vijayan 2023 04 12

திருவனந்தபுரம், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் வலிமையுடன் பதிலளிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.   

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளார். 

இந்நிலையில் இது குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பதன் மூலம் அமெரிக்கா மீண்டும் ஒருமுறை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. இது உலகளாவிய வர்த்தகக் கொள்கைகளை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும்.

இந்த நடவடிக்கை நமது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது. இது கேரளத்தின் ஏற்றுமதியாளர்களை, குறிப்பாக கடல் உணவு, மசாலாப் பொருட்கள், தேயிலை மற்றும் தேங்காய் நார் ஏற்றுமதியாளர்களை கடுமையாகப் பாதிக்கும். இதனால் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாழ்வாதாரங்கள் ஆபத்தில் இருக்கிறது. இது பன்முகத்தன்மை என்ற கருத்து மீதான தாக்குதலும் கூட.

நாம் வலிமையுடன் பதிலளிக்க வேண்டும், நமது இறையாண்மையை நிலைநிறுத்த வேண்டும், அழுத்தத்திற்கு அடிபணிய மறுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து