Idhayam Matrimony

நிறைபுத்தரிசி பூஜையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2025      ஆன்மிகம்
Sabarimala 2023-11-17

Source: provided

திருவனந்தபுரம் : இந்த ஆண்டுக்கான நிறைபுத்தரிசி பூஜைக்காக  சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை  மாலை திறக்கப்படுகிறது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜையில் வைத்து பிரசாதமாக வழங்கப்படும் நெற்கதிர்களை வீட்டில் வைத்து பாதுகாத்து வந்தால் சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டுக்கான நிறைபுத்தரிசி பூஜை வருகிற 30-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற உள்ளது. இதற்காக கோவில் நடை நாளை  (29-ந் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். மறுநாள் (30-ந் தேதி) நிறைபுத்தரிசி பூஜை வழிபாடுகள் நடைபெறும். இதற்காக பாரம்பரிய முறைப்படி பாலக்காடு , கொல்லம் பகுதிகளில் இருந்து ஐயப்ப சேவா சங்கத்தினர் நெற்கதிர் கட்டுகளை சபரிமலைக்கு தலைச்சுமையாக எடுத்து வருவார்கள்.

இதேபோல் சபரிமலையில் பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்களும் அறுவடை செய்யப்பட்டு கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் அவை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும். நிறைபுத்தரிசி பூஜை வழிபாட்டுக்கு பிறகு அன்றைய தினம் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து