Idhayam Matrimony

சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கு: கைதான தந்தை, மகன் நீதிமன்றத்தில் ஆஜர்

வியாழக்கிழமை, 7 ஆகஸ்ட் 2025      தமிழகம்
court 2024-12-30

Source: provided

திருப்பூர்: உடுமலை அருகே போலீஸ் சிறப்பு எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ ஆக பணியாற்றி வந்தவர் சண்முகவேல். விசாரணைக்காக சென்ற இடத்தில் தந்தை மகன்கள் சேர்ந்து அவரை கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி (66), அவரது மகன்கள் மணிகண்டன் (30), தங்கப்பாண்டி (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இதில் நேற்று காலை கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்த இடத்தை காட்டுவதற்காக சென்ற மணிகண்டன் போலீஸாரை அரிவாளால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த குடிமங்கலம் உதவி ஆய்வாளர் சரவணகுமார் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸாரை தாக்க முயன்ற மணிகண்டன் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.

இதையடுத்து மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை யடுத்து மூர்த்தி மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் விசாரணைக்குப் பின் நேற்று உடுமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து