முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் சம்பவத்தில் காரசார விவாதம்: சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு

புதன்கிழமை, 15 அக்டோபர் 2025      தமிழகம்
EPS-2025-05-25

Source: provided

சென்னை : கரூர் சம்பவத்தில் காரசார விவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்யப்பட்டனர்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார். 

சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வதந்திகள் பரவியபோது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வீடியோ மூலமாக நான் கேட்டு கொண்டேன். அதே நேரத்தில் இது போன்ற துயர சம்பவம் இனி நடக்கக்கூடாது என்ற உறுதியை அனைத்து அரசியல் இயக்கங்களும், பொது அமைப்புகளும் எடுக்க வேண்டும். எல்லாவற்றையும் விட மக்களின் உயிரே முக்கியம். மக்களின் உயிரே விலைமதிப்பற்றது. இதனை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என கூறினார். 

இந்நிலையில், முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம் என எடப்பாடி பழனிசாமி கூறினார். சில விசயங்களை குறிப்பில் இருந்து நீக்கும்படியும் கோரினார். இதனால், இரு கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. அப்போது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது சபாநாயகர் அப்பாவு, தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால், காவல் துறையை வைத்து நடவடிக்கை எடுப்பேன் என எச்சரிக்கை செய்ததுடன், உறுப்பினர்கள் இருக்கையில் அமர வேண்டும். இல்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன் என கூறினார். அமைதியாக இருந்தால், எதிர்க்கட்சி தலைவர் நீக்க கூறிய விசயங்களை நீக்குவேன் என்றும் கூறினார்.

முதல்வர் அறிக்கையில் தவறு ஏதேனும் இருப்பின் அதனை சுட்டி காட்டலாம் என்று துரைமுருகன் கூறினார். எனினும், அவையில் தொடர்ந்து தரையில் அமர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சபாநாயகரை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதனையடுத்து, அவர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனை முன்னிட்டு, சட்டசபை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து