முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் - டி-20 போட்டி தொடர்: ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி

புதன்கிழமை, 15 அக்டோபர் 2025      விளையாட்டு
India 2024-02-05

Source: provided

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி-202 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் நேற்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர். 

தொடரை வென்றது...

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

ரோகித் - விராட் கோலி...

இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி நடக்கிறது. ஒருநாள் தொடரின் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். 7 மாதங்களுக்கு பிறகு இருவரும் களம் காணுவதால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் நேற்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர். 

வீடியோ வைரல்

இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், கேஎல் ராகுல், ஜெய்ஸ்வால், பிரஷித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜூரல், நிதிஷ் குமார், ஹர்ஷித் ராணா ஆகியோர் புறப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து