முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்: 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சனிக்கிழமை, 11 அக்டோபர் 2025      ஆன்மிகம்
Tiruchendur 2024-02-14

Source: provided

திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வருகிற 27-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 22-ம் தேதி தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 27ம் தேதியும், திருக்கல்யாணம் 28-ம் தேதியும் நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்காக கோவில் சாா்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் மாவட்டம் முழுவதற்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு 2710.2025, திங்கட்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள்/ பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலவாணி முறிச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக 8.11.2025 இரண்டாவது சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து