முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கவச முறைகேட்டை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது கேரள ஐகோர்ட்

செவ்வாய்க்கிழமை, 7 அக்டோபர் 2025      ஆன்மிகம்
Sabarimalai 2023-04-13

திருவனந்தபுரம், சபரிமலை கவச முறைகேடு விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலின் வெளியே 12 துவாரபாலகர் சாமி சிலை உள்ளது. இந்த சிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் பொருத்தப்பட்டு இருந்தது. கடந்த 1999-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட சிலையின் கவசம் பொலிவு இழந்ததால், கவசத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக தொழில் அதிபர் உன்னிகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்திடம் கவசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அந்த கவசத்தின் எடை 42.800 கிலோவாக இருந்தது.

பணிகள் முடிந்து சபரிமலைக்கு திரும்ப கொண்டு வரப்பட்டபோது, எடை குறைவாக இருந்தது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. அப்போது தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் எடை குறைந்த விவகாரத்தை விசாரிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு, விஜிலென்ஸ் குழுவுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது திருவிதாங்கூர் தேவசம் போர்டுவின் விஜிலென்ஸ் குழு இந்த விவகாரத்தில் அதன் முதல்கட்ட விசாரணையின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது. முன்னதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு விஜிலென்ஸ் குழு உன்னிகிருஷ்ணனிடம் 2 நாட்கள் விசாரணை நடத்தியது. அதன் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தது.

இதைத்தொடர்ந்து கேரள ஐகோர்ட்டு, போலீஸ் சூப்பிரண்டு சசிதரன் தலைமையில் சிறப்பு புலனாய்வு விசாரணை குழு அமைக்க உத்தரவிட்டது. மேலும் சைபர் போலீஸ் அதிகாரிகளும் குழுவில் இடம்பெறுவர். இதுகுறித்த விசாரணை ரகசியமாக நடத்தப்பட வேண்டும். அறிக்கைகளை நேரடியாக கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கிடையே கேரள ஐகோர்ட்டின் சிறப்பு விசாரணை குழுவை அமைக்கும் உத்தரவை சபரிமலை தேவசம்போர்டு மந்திரி வாசவன் வரவேற்றுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து