எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்படி நேற்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,900-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.95,200-க்கும் விற்பனையானது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவது இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்ல சுப நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வைத்திருக்கும் குடும்ப தலைவர்களுக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை எப்போது இறங்கும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கடந்த 7-ந்தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்தை தாண்டிய நிலையில், 8-ந்தேதி ரூ.91 ஆயிரம், 11-ந்தேதி ரூ.92 ஆயிரம் என உயர்ந்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,960 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.94 ஆயிரம் என்ற உச்சத்தையும் கடந்தது.
இதனையடுத்து நேற்று முன்தினமும் தங்கம் விலை ஏறுமுகத்தில் காணப்பட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 825-க்கும், ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.35-ம், சவரனுக்கு ரூ.280-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 860-க்கும், ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்றும் (வியாழக்கிழமை) தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்படி நேற்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,900-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.95,200-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலையும் கடந்த ஒரு வாரமாக தினமும் கிராமுக்கு ரூ.5-க்கு குறையாமல் விலை ஏற்றம் கண்டது. ஆனால் நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.207-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று வெள்ளி விலை சற்று குறைந்தது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரம் ரூபாயும் குறைந்து, ஒரு கிராம் ரூ.206-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


