முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயிலில் நூடுல்ஸ் சமைத்த பெண்: ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை

சனிக்கிழமை, 22 நவம்பர் 2025      இந்தியா
train-noodles-2025-11-22

புதுடெல்லி, ரயிலில் நூடுல்ஸ் சமைத்த பெண் மீது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ரயிலில் டீ போடும் சாதனத்தை(எலெக்ட்ரிக் கெட்டில்) வைத்து நூடுல்ஸ் சமைத்த பெண் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில், ரயிலில் ஏ.சி. வகுப்பு பெட்டியில் பயணம் செய்யும் நடுத்தர வயது பெண் ஒருவர், இருக்கையில் அமர்ந்தபடி செல்போன் சார்ஜிங் போட பயன்படுத்தும் பிளக் பாயிண்டில் எலெக்ட்ரிக் கெட்டில் சாதனத்தை இணைத்து சமைக்கத் தொடங்குகிறார்.

இதனை அங்கிருந்த சக பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். வீடியோவில் அந்த பெண் மராத்தி மொழியில், “இந்த சாதனத்தை பயன்படுத்தி 10 பேருக்கு டீ போட்டுக் கொடுத்திருக்கிறேன்” என்று கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், பலரும் பெண் பயணியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட வீடியோவில் இருக்கும் பெண் பயணியை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ரயில்வே சட்டத்தின் பிரிவு 147(1)-ன் கீழ் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய ரயில்வே நிர்வாகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரயில் பயணத்தின்போது எலெக்ட்ரிக் கெட்டில் போன்ற சாதனங்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தீவிபத்து உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பயணிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து