எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாங்காக், மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை மெக்சிகோ பாத்திமா போஷ் வென்றார்.
மிஸ் யுனிவர்ஸ் போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. சர்வதேச நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான 74-வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி, தாய்லந்தில் உள்ள இம்பாட் சேலஞ்சர் ஹாலில் நடந்தது. இதில் இந்தியா சார்பில் மணிக விஸ்வகர்மா போட்டியிட்டார்.
இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ் வென்றார். கடந்த ஆண்டு வெற்றியாளரான டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கஜேர் தீல்விக்கிடமிருந்து பாத்திமா போஷ் கிரீடத்தைப் பெற்றார். தாய்லாந்தின் வீணா பிரவீனர் சிங் முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தார்.
இவர் முதல் ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டார். மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற, பாத்திமா போஷ்க்கு வாழ்த்துகளை பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட மனிகா விஸ்வகர்மாவால், முதல் 12 இடங்களுக்குள் வர முடியவில்லை. தற்போது மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றுள்ள பாத்திமா போஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


