எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வருகிற 28-ம் தேதி வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட கோவாவில் தொடங்கியது. இவ்விழாவில், 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன.
இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் உள்ள பன்ஜிமில் தொடங்கியது. விழாவை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்து பேசியதாவது:- இந்தியா உலகளாவிய திரைப்பட தயாரிப்பு மையமாக உருவெடுக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை.
இந்த வேவ்ஸ் பிலிம் பஜார் நிகழ்வு படைப்பாளர்களுக்கும், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் இடையிலான பாலமாக திகழ்கிறது. இளம் படைப்பாளிகளையும், புதிய கதைகளை கொண்டுள்ளவர்களையும் ஆதரிப்பதற்கான தளமாக இது செயல்படுகிறது. இந்த ஆண்டு 124 புதிய படைப்பாளிகள் பங்கேற்று உள்ளனர். இந்திய கலாசாரத்தை உலகிற்கு எடுத்துச் செல்வதில் இது முக்கியப் பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
50 ஆண்டுகளை கடந்த தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு நினைவுப்பரிசு அளித்து கவுரவிக்கப்பட்டது. வருகிற 28-ந்தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. அதில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்', அப்புக்குட்டியின் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' மற்றும் இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள ‘ஆநிரை' என்ற குறும்படம் ஆகியவை இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன.
இந்தியத் திரைப்பட விழாக்களில் முதன்மையான இவ்விழாவில் நாட்டின் முக்கிய திரைக்கலைஞர்கள் கவுரவிக்கப்பட இருக்கிறார்கள். குறிப்பாக திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், நடிகர் ரஜினிக்கு இந்த கவுரவம் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்திய திரைப்பட விழாவில், மறைந்த திரைப்பட இயக்குனர்கள் குரு தத், ராஜ் கோஸ்லா, பானுமதி, ரித்விக் காதக், பூபென் ஹசாரிகா மற்றும் சலீல் சவுத்ரி ஆகியோரின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


