முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: தொலை தொடர்பு சேவை பாதிப்பு

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2025      தமிழகம்
BSNL-Chennai-2025-12-20

சென்னை, சென்னையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தீ விபத்து எதிரொலியால் 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்பட்டது. மேலும் தொலை தொடர்பு சேவை வெகுவாக பாதிக்கப்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தென் மண்டல பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் நேற்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு கீழிருந்து மேலாக ஒவ்வொரு மாடிக்கும் பரவியது. காலை நேரம் என்பதால் அலுவலத்தினுள் ஒரு சில ஊழியர்கள் மட்டுமே இருந்த நிலையில், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

10 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அண்ணா சாலை முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இந்த நிலையில், பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் சென்னையில் பல இடங்களில் பி.எஸ்.என்.எல். இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய இணைய சேவையும் முடங்கியுள்ளது. மேலும், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அரசு அலுவலகங்களில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொலை தொடர்பு சேவை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து