முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிக்கு இந்திய அணி முன்னேற பி.சி.சி.ஐ.க்கு கில் புதிய யோசனை

திங்கட்கிழமை, 5 ஜனவரி 2026      விளையாட்டு
Gill--2026-01-05

மும்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேற வேண்டும் என்றால் டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக வீரர்களுக்கு 15 நாள் முகாம் நடத்தவேண்டும் என்று பி.சி.சி.ஐ.க்கு சுப்மன் கில் புதிய யோசனை தெரிவித்துள்ளார்.

4 வெற்றிகளுடன்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பந்தயத்தில் இந்தியா நீடிக்க வேண்டும் என்றால் அடுத்து வரும் 9 போட்டிகளில் குறைந்த பட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகள் விளையாடி உள்ளது. இதில் ஒரு போட்டி டிரா, 4 வெற்றி, 4 தோல்வியடைந்துள்ளது. இதன் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.

9 போட்டிகள் மட்டும்...

இன்னும் இந்திய அணிக்கு 9 போட்டிகள் உள்ளது. இதில் குறைந்த பட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்திய அணி இந்த 9 போட்டிகளில் ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இலங்கையில் 2 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. அதனை தொடர்ந்து நியூசிலாந்திலும் 2 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. கடைசியாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

புதிய திட்டம்... 

நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக முடிந்த அளவுக்கு இந்தியா போராடி வெற்றி பெற்றாலும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெறுமா என்பது சந்தேகமாக உள்ளது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு புதிய திட்டம் ஒன்றை டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் வகுத்துள்ளார். ஒரு டெஸ்ட் தொடரில் களமிறங்குவதற்கு முன்பு இந்திய அணி வீரர்களுக்கு சிறந்த பயிற்சி தேவை. ஆகவே ஒவ்வொரு டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக வீரர்களுக்கு 15 நாள் முகாம் நடத்தவேண்டும் என்று பி.சி.சி.ஐ.யிடம் கில் கோரிக்கை வைத்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து