எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க், அமெரிக்காவில், பயங்கரவாதத் தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெக்ஸாஸ் மாகாணத்தின் வெஸ்ட் சிக்ஸ்த் ஸ்டீரித் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) அதிகாலை மர்ம நபர் ஒருவர் திறந்தவெளியில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில், 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் படித்து வந்த் ஆஸ்டின் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவியான சவிதா சன்முகசுந்தரம் (வயது 21) என்பவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரைடர் ஹாரிங்டன் (19) என்பவர் உள்பட கொல்லப்பட்டவர்களில் 2 பேரின் அடையாளங்களை மட்டுமே அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இந்தத் தாக்குதல், அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் செனீகல் நாட்டில் இருந்து குடியேறி அமெரிக்க குடியுரிமைப் பெற்ற நிடியாகா டியாக்னே (53) என்பவரை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்திலும், கொலையாளியின் வீட்டிலும் இருந்து ஈரான் நாட்டின் கொடி, தீவிரவாத எழுத்துக்கள் ஆகியவைக் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால், இது ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை எதிர்க்கும் விதமாக நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கக் கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


