எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பகிர், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தால் பங்குச் சந்தைகள் நேற்று (பிப். 27) கடும் சரிவுடன் வர்த்தகமாகி நிறைவு பெற்றுள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று காலை 82,220.48 என்ற புள்ளிகளில் தொடங்கி சற்று சரிவுடன் வர்த்தகமானது. பின்னர் கடுமையாகச் சரிவடைந்த நிலையில், வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 961.42 புள்ளிகள் (1.17 சதவீதம்) குறைந்து 81,287.19 புள்ளிகளில் நிறைவு பெற்றது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 317.90 புள்ளிகள்(1.22 சதவீதம்) குறைந்து 25,178.65 புள்ளிகளில் நிலை பெற்றது.
நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.14 சதவீதம், 1.10 சதவீதம் சரிந்து முடிவடைந்தன. துறை வாரியாக, அதிகபட்சமாக நிஃப்டி ரியல் எஸ்டேட் மற்றும் நிதி சேவைகள் குறியீடுகள் முறையே 2.3 சதவீதம் மற்றும் 2.1 சதவீதம் சரிந்து முடிவடைந்தன. வர்த்தக நேர இறுதியில் நிஃப்டி மீடியா, ஐடி, நுகர்வோர் பொருள்கள் குறியீடுகள் மட்டும் லாபத்தைச் சந்தித்தன. மற்ற அனைத்துத் துறைகளும் நஷ்டத்துடன் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா அதிக இழப்பைச் சந்தித்த நிறுவனங்கள். சென்செக்ஸ் 30 பங்குகளில் டிரென்ட், ஹெச்சிஎல், இன்போசிஸ், எட்டர்னல் ஆகிய 4 நிறுவனங்கள் மட்டுமே லாபமடைந்துள்ளன. நேற்றைய சரிவு வர்த்தகத்தால் ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக இறுதியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.07% குறைந்து 90.97 ஆக உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் குறிப்பாக அமெரிக்கா - ஈரான் இடையேயான அணு ஒப்பந்த பேச்சுவார்த்தையால் பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவைச் சந்தித்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


