Idhayam Matrimony

மத்திய கிழக்கில் போர் பதற்றம்; தமிழர்களுக்கு பாதிப்பு இல்லை - அரசு தகவல்

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2026      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக அங்குள்ள தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் திடீர் தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக பஹ்ரைன், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனிடையே அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அவரது மரணத்தையடுத்து ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் தங்கி வேலை செய்து வரும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக அங்குள்ள தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு அமைத்துள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 974 பேர் உதவிகேட்டு தொடர்பு கொண்டுள்ளதாகவும், இவர்கள் அனைவரும் தொழில் மற்றும் சுற்றுலாவுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் உதவி கேட்டவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்களுக்கு தங்குமிடம், உணவு வசதி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனவே, மத்திய கிழக்கில் உள்ளவர்களின் உறவினர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும், விமான சேவை தொடங்கப்பட்டவுடன் அனைவரும் பத்திரமாக அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து