முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வாழை இலையில் சாப்பிடுவது ஏன்?

Image Unavailable

நமது முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு காரணமாக வாழை இலையும் உள்ளது என்று சொல்லாம். ஏனெனில் அக்காலத்தில் எல்லாம் தட்டுக்களை பயன்படுத்துவதை விட, வாழை இலையைத் தான் அதிகம் பயன்படுத்தினார்கள். அதிலும் விருந்து என்று சொன்னாலே, வாழை இலை இல்லாமல் விருந்து நடைபெறாது. அந்த அளவிற்கு வாழை இலையானது மிகவும் முக்கியமான ஒன்றாக நம் முன்னோர்களின் மத்தியில் இருந்து வந்தது. வாழை இலையிலேயே சாப்பிட்டு வந்திருந்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபட்டு இருக்கலாம். வாழை இலையில் உணவை வைக்கும் போது, அதில் உள்ள உப்பு, புளிப்பு மற்றும் காரம் போன்றவை செரிமான ஆசிட்டின் சுரப்பை அதிகரித்து, உணவானது எளிதில் செரிமான மடைய உதவுகின்றன.

மேலும் இலையில் சாதத்தை சூடாக வைக்கம் போது, சாதமானது இலையில் உள்ள குளோரோபில்லை உறிஞ்சி விடுவதால், உடலுக்கு வேண்டிய குளோரோபில் கிடைக்கிறது. வாழையில் தினமும் சாப்பிட்டு வந்தால், இளநரை வருவது தடுக்கப்பட்டு, நீண்ட நாட்கள் முடியானது கருப்பாகவே இருக்கும். பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும நோய்களை தடுக்க, வாழை இலையில் நல்லெண்ணெயை தடவி, அந்த இலையை சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து, அவ்விலையின் மேல் குழந்தையை படுக்க வைத்தால், சூரிய ஒளியில் இருந்து குழந்தைக்கு வைட்டமின் டி கிடைப்பதுடன்,  வாழை இலையானது குழந்தையை குளிர்ச்சியுடன் வைத்து சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

இப்போதும் ஒன்று ஆகப் போவதில்லை. அனைவரும் இன்று முதல் வாழை இலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதில் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கிய மான வாழ்க்கையை வாழலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago