இந்திய அழகி சிந்தூரா நடிக்கும் `திகில்'

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      சினிமா

 

சென்னை, பிப்,20

தலக்கோணம் காட்டில் வைரம் இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

அதனை பூமியிலிருந்து எடுக்கும் பொறுப்பிறகு ஆட்களை நியமித்தனர். அவர்களும் காட்டுப்பகுதிக்கு வந்தனர். தேடலில் இருந்த அவர்கள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் இறக்கின்றனர். ஆனால் இறந்த உடலும் கிடைப்பதில்லை.

இதைக் கண்டுபிடிக்க சி.பி.ஐ. அதிகாரியாக சிந்தூரா வருகிறார். அவருடைய துப்பறிதல் இரண்டு விதமாக இருக்கிறது. கோவை - மும்பையை சேர்ந்த இரண்டு பிரிவினர் அதே காட்டுப்பகுதியில் வைரங்களை தேடுவதும் - மெயின் ரோட்டில் உள்ள இரண்டு ஹோட்டல்களின் உரிமையாளர்கள் மீதும் சிந்தூரா சந்தேகப்படுகிறார்.

காணாமல் போன இறந்த உடல்களை கண்டுபிடித்தாரா? இல்லை இவரும் காணாமல் போனாரா? இந்த கேள்விகளுக்கு விடையளிக்கத்தான் சீனிவாசா கிரியேஷன்ஸ் நிறுவனத்தினர் திகில் என்ற படத்தை தயாரித்து வருகின்றனர்.

2007-ல் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிந்தூரா இதில் சி.பி.ஐ. அதிகாரியாக ஜோடி இல்லாமல் நடிக்கிறார். மலும் இதில் நிழல்கள் ரவி, பொன்னம்பலம், ரிஷா, பரணி, ஷபி, சார்மிளா, ராமிரெட்டி, விஜய் (நடிகை ரவளியின் சகோதரர்) ஆகியோர் நடிக்கின்றனர்.

ரவிகிரண் - நகேஷ் இருவரும் இணைந்து தயாரிக்க, வசனத்தை கிருஷ்ணமூர்த்தி எழுத, அரவிந்த் கேமாராவை கையாள, சாய்கார்த்திக் இசையமைக்க பிரதீப் ஆண்டனி நடனப்பயிற்சி அளிக்க, ஹரி படத்தொகுப்பை கவனிக்கிறார். பிரபல இயக்குநர்களிடம் உதவியாளராக இருந்த நகேஷ் டைரக்ட் செய்கிறார்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: