சோனியா காந்தியிடம் அத்வானி வருத்தம்

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      அரசியல்

புதுடெல்லி,பிப்.19 சுவிட்சர்லாந்து வங்கி விவகாரம்  - சோனியா காந்தியிடம் அத்வானி வருத்தம் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் சோனியாகாந்தி மற்றும் அவரது மறைந்த கணவர் ராஜூவ்காந்தி பெயரிலும் வங்கிக்கணக்கு இருக்கிறது என்று தவறுதலாக கூறியதற்காக சோனியா காந்தியிடம் எல்.கே. அத்வானி வருத்தம் தெரிவித்தார். 

ஜெர்மன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளின் வங்கிகளில் இந்தியர்கள் ரகசிய கணக்கு தொடங்கி ரூ.80 லட்சம் கோடி வரை கறுப்பப்பணத்தை

போட்டு வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து விபரம் அறிய பாரதிய ஜனதா ஒரு பணிக்குழுவை அமைத்தது. இந்த குழுவானது சுவிட்சர்லாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள வங்கிகளில் இந்தியர்கள் ரகசியமாக பணம் போட்டுவைத்திருப்பவர்கள் பட்டியலை தயாரித்தது. அந்த பட்டியலில் சோனியா காந்தி, மற்றும் அவரது மறைந்த கணவர் ராஜூவ்காந்தி பெயரில் கணக்கு இருப்பதாகவும் அவர்கள் பணம் போட்டு வைத்திருப்பதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.கே. அத்வானி கூறியிருந்தார். அத்வானியின் இந்த குற்றச்சாட்டை மறுத்து அவருக்கு சோனியா காந்தி ஒரு கடிதம் எழுதியிருந்தார். இதனையொட்டி அந்த பட்டியலை அத்வானி திரும்ப பார்த்ததாக தெரிகிறது. அதில் சோனியா காந்தி மற்றும் ராஜீவ்காந்தியின் பெயர் இல்லை என்று தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனையொட்டி தாம் தவறுதலாக கூறியதற்கு வருந்துவதாக சோனியா காந்திக்கு அத்வானி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். 

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: